இந்த ஆண்டில் கமல்ஹாசனின் 3 படங்கள் ரிலீஸ் | அன்னையர் தினத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ | 'மைதான்' படம் தோல்வி : தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் | என்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா...! | உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி |
மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கின்றன. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவருக்கு விருது வழங்குவதில் மத்திய அரசு தாமதிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 3 நாட்களுக்கு முன்பு எனக்கு டில்லியில் இருந்து அழைப்பு வந்தது. விஜயகாந்திற்கு வரும் 9ம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நானும், விஜயபிரபாகரனும் விருது பெற டில்லி செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.