அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் |
'விக்ரம்' படத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக சில புதிய படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த ஆண்டில் அவர் நடித்து மூன்று படங்கள் வெளியாக உள்ளது. முதலில் தெலுங்கில் நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படம் ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படம் வரப் போகிறது. மூன்றாவதாக மணிரத்னம் இயக்கி வரும் 'தக் லைப்' படம் வெளிவர உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே ஆண்டில் கமல்ஹாசன் நடித்துள்ள மூன்று படங்கள் இந்த ஆண்டு வரப்போது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. 'கல்கி 2898 ஏடி' படத்தில் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் தான் நடித்துள்ளார். இருந்தாலும் அப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. 'இந்தியன் 2', தக் லைப்' ஆகிய படங்களும் பான் இந்தியா படங்களாகவே வெளிவரும்.
'தக் லைப்' படம் முடிந்த பின் ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்க உள்ள தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன்.