'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. மகாபாரத கதையை தழுவி சயின்ஸ் பிக்ஷன் கலந்த பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இப்படம் மே 9ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
ஆனால் மே மாதம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், படத்தின் வசூல் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். எனவே, படம் மே 9ம் தேதி வெளியாகாது என்ற தகவல் பரவியது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு படத்தை வெளியிட முடிவு செய்த படக்குழு தற்போது ஜூன் 27ல் வெளியிடுவதாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் பிரபாஸ், அமிதாப் மற்றும் தீபிகா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.