'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வருகிற அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171வது படத்திலும் வேட்டையன் படத்தை போலவே பல மொழிகளை சார்ந்த நடிகர் நடிகைகளும் இடம் பெறப் போகிறார்கள்.
அப்படத்தில் ரஜினியுடன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், மலையாள நடிகை ஷோபனா, தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், பின்னர் சத்யராஜ் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் ரஜினி 171வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் தலைப்பு நாளை (ஏப்.,22) வெளியாகிறது.