ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

பான் இந்தியா அளவில் வெளியீடு என்றால் அதில் தென்னிந்திய அளவில் தெலுங்குப் படங்கள்தான் முன்னணியில் இருக்கிறது. இந்த வருடம் தமிழிலும் சில பிரம்மாண்டப் படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அவற்றை வட இந்தியாவில் கொண்டு சேர்க்கும் அளவிற்கு அப்படங்களின் தயாரிப்பாளர்கள் உண்மையாகவே முயற்சிப்பதில்லை. ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கும் அதே நிலைமைதான்.
ஆனால், தெலுங்கில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா' ஆகிய படங்களுக்குப் பிறகு அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் ஹிந்தி உரிமை விலையில் அதிக வியாபாரத்தைப் பெறுகின்றன. சமீபத்தில் 'புஷ்பா 2' படம் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
அடுத்து பிரபாஸ் நடித்து வெளியாக உள்ள 'கல்கி 2898 ஏடி' படம் 100 கோடிக்கும், ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் 75 கோடிக்கும், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள 'தேவரா' படம் 50 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் ரஜினியின் 'வேட்டையன்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2', விஜய்யின் 'தி கோட்', அஜித்தின் 'விடாமுயற்சி', சூர்யாவின் 'கங்குவா' ஆகியவை எந்த விலைக்கு போகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.