காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் கடந்த பல மாதங்களாக 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் 70 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் சில பிரச்னைகளால் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த பின் வருகின்ற ஏப்ரல் 25ம் தேதி அஜர்பைஜான் பகுதியில் மீண்டும் தொடங்குகின்றனர். முழுமூச்சாக இந்த இறுதிகட்ட படப்பிடிப்பை மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் அஜித், அர்ஜுன், த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளைக் பெரும்பாலும் படமாக்கவுள்ளனர்.