ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி |

கிரிஷ் இயக்கத்தில், நஸ்லன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரியில் வெளிவந்த மலையாளப் படம் 'பிரேமலு'. இப்படம் தெலுங்கு, தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது. இப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்திலும் வெளியானது.
இப்படத்தை நயன்தாரா இப்போதுதான் பார்த்திருக்கிறார். படத்தின் ஸ்கிரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, “சிறந்த படங்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது,” எனப் பாராட்டியுள்ளார். தியேட்டர்கள் மூலம் மட்டுமே 130 கோடி வரை வசூலித்துள்ள இப்படத்திற்கு தற்போது ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சுமார் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இவ்வளவு கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. பல சினிமா பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.