பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் முதல் சிங்கிள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான அந்தப் பாடல் யு-டியூப் தளத்தில் 38 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. விஜய்யின் பாடல்களுக்குக் கிடைக்கும் வழக்கமான வரவேற்புதான் இந்தப் பாடலுக்கும் கிடைத்துள்ளது.
இருந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள், குறிப்பாக அனிருத் ரசிகர்கள் இந்தப் பாடல் குறித்து தரக் குறைவான விதத்தில் யுவனின் இன்ஸ்டா தளத்தில் கமெண்ட்டுகளைச் செய்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் யுவன் ரசிகர்களுக்கும், அனிருத் ரசிகர்களுக்கும் சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்ஸ்டா தளத்திலிருந்த தனது கணக்கை யுவன் டெலிட் செய்துள்ளார். திடீரென அந்தக் கணக்கு இல்லாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நச்சுத்தனமான ரசிகர்களே அதற்குக் காரணம் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.




