ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
கன்னடத் திரையுலகத்தில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பெயர் பெற்றவர் நேற்று மறைந்த துவாரகீஷின். கன்னடத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின் படங்களைத் தயாரித்து, இயக்குனராகவும் மாறியவர்.
கன்னடத்தில் இவர் தயாரித்த 'ஆப்தமித்ரா' படம் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்த ஒரு திரைப்படம். பி.வாசு இயக்கிய அந்தப் படம்தான் பின் தமிழில் 'சந்திரமுகி' ஆக ரீமேக் ஆகி இங்கும் 800 நாட்களைக் கடந்து ஓடியது.
துவாரகீஷ் பற்றி ரஜினி ரசிகர்களுக்கும், 80களின் சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கம். தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஜோடியான ரஜினி - ஸ்ரீதேவி ஜோடியை கடைசியாக இயக்கியவர் துவாரகீஷ். 1986ம் ஆண்டு வந்த 'நான் அடிமை இல்லை' படம் தான் ஸ்ரீதேவி தமிழில் கதாநாயகியாக நடித்த கடைசி படம். அந்த சமயத்தில் ஹிந்தியில் பிஸியாகிவிட்டார் ஸ்ரீதேவி. அவரை அழைத்து வந்து தமிழில் தனது படத்தில் நடிக்க வைத்தார் துவாரகீஷ்.
அப்படத்திற்குப் பிறகு சுமார் 29 வருடங்களுக்குப் பிறகே 'புலி' படத்தின் மூலம் தமிழில் நடித்தார் ஸ்ரீதேவி.
'நான் அடிமை இல்லை' படம் பெரும் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பாடல்களால் கவர்ந்த ஒரு படம். 'ஒரு ஜீவன்தான், வா வா இதயமே, தேவி..” ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை. கன்னட இசையமைப்பாளரான விஜய் ஆனந்த் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
'நான் அடிமை இல்லை' படத்திற்குப் பிறகு 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா' என்ற படத்தையும் துவாரகீஷ் இயக்கினார். ரஜினிகாந்த் நடித்த 'அடுத்த வாரிசு', பிரியாமணி நடித்த 'சாருலதா' ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். ஹிந்தியில் ரஜினிகாந்த் நடித்த 'கங்குவா' படத்தையும் தயாரித்தது இவரே. தமிழில் வெளிவந்த சில சூப்பர் ஹிட் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து தயாரித்தவர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கன்னட சினிமா பிரபலங்கள் துவாரகீஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.