நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷால் அளித்த ஒரு பேட்டியில், சமீபத்தில் நடைபெற்ற வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, வரலட்சுமியை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு ஒரு பெரிய மார்க்கெட் உள்ளது. திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பை பார்த்து அசந்து போன நான், சமீபத்தில் ஹனுமன் படத்தில் வரலட்சுமியின் நடிப்பை பார்த்தும் வியந்து போனேன். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். அவர் தன்னுடைய சினிமா கேரியரை தாண்டி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் விஷால்.