நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
குட்டிப் புலி, கொம்பன், மருது போன்ற கிராமத்து ஆக்ஷன் படங்களைக் ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் முத்தையா. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' என படம் பெரிதளவில் தோல்வி அடைந்தது. இதனால் இவருக்கு அடுத்து எந்த முன்னனி நடிகர்களின் கால்ஷீட்டும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தனது இயக்கத்தில் தன் மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக அறிமுகபடுத்தி புதிய படம் ஒன்றைக் இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. இப்போது இந்த படத்திற்கு 'சுள்ளான் சேது' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டர் உடன் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.