சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் ஆடியோ உரிமை சுமார் 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் திரையுலகத்தில் சமீபகாலத்தில் இந்த அளவு விலைக்கு வேறு எந்தப் படங்களின் ஆடியோ உரிமையும் விற்கப்படவில்லை என்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் கூட கடந்த வருடமே போடப்பட்டுவிட்டது என்றும் தகவல்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகப் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதுதான் இரண்டாம் பாகத்திற்கான ஆடியோ உரிமை இந்த அளவிற்கு விற்கக் காரணமாக அமைந்துள்ளதாம்.
இதற்கு முன்பு 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஆடியோ உரிமை 25 கோடிக்கும், 'சாஹோ' படத்தின் ஆடியோ உரிமை 22 கோடிக்கும், 'பாகுபலி 2' படத்திற்கு 12 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். அடுத்த சில வாரங்களில் 'புஷ்பா 2' படத்தின் மற்ற வியாபார உரிமைகள் பற்றிய விவரங்கள் வெளியாகி ஆச்சரியத்தைக் கொடுக்கலாம் என்றும் டோலிவுட்டில் சொல்கிறார்கள்.