திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
'மகாநடி' மற்றும் 'சீதா ராமம்' படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த துல்கர் சல்மான் தற்போது நடித்து வரும் படம் 'லக்கி பாஸ்கர்'. வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு வங்கி கேஷியர் அந்த வங்கியையே கொள்ளை அடிக்க திட்டமிட்டால் எப்படி இருக்கும் என்பது படத்தின் கதை. கொள்ளை என்றால் நேரடியாக இல்லாமல் வங்கியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எப்படி ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் என்பது மாதிரியான கதை. தெலுங்கில் தயாரானாலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாகிறது.