தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
நடிகர் விஜய் தற்போது 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்', சுருக்கமாக கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்கிற அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்திருந்தார். தனது அடுத்த படமே கடைசி படமாக நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
விஜய்யின் 69வது படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது. இந்நிலையில் ஒரு சில காரணங்களால் டி.வி.வி நிறுவனம் இந்த படத்தை விட்டு வெளியேறியதாக தகவல் பரவி வருகிறது. இதனால் இப்போது விஜய்யை வைத்து ஏற்கனவே படங்களை தயாரித்த தமிழ் பட தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.