'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அல்லு அர்ஜுனுக்கு ஒரு பான் இந்திய வெற்றியாக இந்த படம் அமைந்தது. சில வெளிநாட்டு அதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தை ரசித்து அவரது மேனரிசத்தை தாங்களும் ரசித்து செய்த வீடியோ வெளியிட்டனர். இதை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆக-15ல் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தில் இருந்த பல சிறப்பு அம்சங்கள் இந்த இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளன.
சில தினங்களுக்கு முன் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான 12 மணி நேரத்திலேயே 51 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்தது. தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் 88 மில்லியன் பார்வையாளர்கள் என்கிற மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அது மட்டுமல்ல இந்த டீசருக்கு 1.4 மில்லியன் லைக்குகள் கிடைத்திருப்பதும் புதிய சாதனைதான்.