'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சில இயக்குனர்களும், சில நடிகர்களும் இணைந்தே பயணிப்பார்கள். அவர்களுக்குள் சினிமா தாண்டி ஒரு நட்பு ஏற்பட்டிருக்கும். இவர்களை ஆஸ்தான இயக்குனர்கள், ஆஸ்தான நடிகர்கள் என்ற குறிப்பிடுவார்கள். ரஜினிக்கு எஸ்.பி.முத்துராமன், கமலுக்கு கே.பாலச்சந்தர். சிவாஜிக்கு திருலோகசந்தர், எம்.ஜி.ஆருக்கு நீலகண்டன், விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமிக்கு, சூர்யாவுக்கு ஹரி இப்படியான பட்டியல் அதிகம்.
அந்த வரிசையில் ஜெய்சங்கரின் ஆஸ்தான இயக்குனர் மதுரை திருமாறன். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த இவர் 1971ம் ஆண்டு 'சூதாட்டம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். 50 படங்களுக்கு மேல் இயக்கி உள்ள இவர் ஜெய்சங்கரை வைத்து மட்டும் 20 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். சொந்தங்கள் வாழ்க, திருடி, மேயர் மீனாட்சி, தாய் வீட்டு சீதனம், இளையராணி ராஜலட்சுமி, ஆகியவை அவற்றில் முக்கியமான படங்கள்.