''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2024ம் ஆண்டின் கடந்து போன மூன்று மாதங்களில் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி, சாதனை வசூல், சிறப்பான வரவேற்பு என்று சொல்லும்படியான படங்கள் ஒன்று கூட வரவில்லை. 60 படங்கள் வந்தாலும் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல் தரும் படம் எதுவும் இல்லை என்பது வருத்தமே.
தற்போது தேர்தல் பிரச்சாரம், ஐபிஎல் போட்டிகள், தேர்வுகள் என போய்க் கொண்டிருக்கிறது. அதனால், மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர யோசிக்கிறார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே தேர்வுகள் முடிந்துவிடும், தேர்தல் பிரச்சாரமும் முடிந்துவிடும். எஞ்சியிருப்பது ஐபிஎல் போட்டிகள்தான். அதுவும் இரவு நேரங்களில்தான் நடக்கப் போகிறது.
எனவே, ஏப்ரல் 19ம் தேதிக்குப் பிறகு புதிய படங்களை வெளியிட தயாராகி வருகிறார்கள் திரையுலகினர். ஏப்ரல் 26ம் தேதி விஷால் நடித்துள்ள 'ரத்னம்' வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அப்படத்துடன் தமன்னா, ராஷிகண்ணா நடித்துள்ள 'அரண்மனை 4,' சந்தானம் நடித்துள்ள 'இங்கு நான்தான் கிங்கு' ஆகிய படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.
மே மாத கோடை விடுமுறையில் இன்னும் சில பல பெரிய படங்களையும் வெளியிட வாய்ப்புகள் உள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் பல படங்களின் வெளியீடு பற்றிய அப்டேட்டுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.