அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதியன்று அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது.
டீசருக்கான பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் தற்போது சென்னையில் உள்ள தேவிஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் அந்த ஸ்டுடியோவில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.
அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து அல்லு அர்ஜுன் 'தி ரூல்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த ஸ்டுடியோவில் வைக்க தேவிஸ்ரீ பிரசாத்திற்கு அவர் பரிசளித்த லோகோவின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்து தேவி ஸ்ரீ பிரசாத், 'தி ரூல், வித் லவ்' என்றும், “இந்த ஸ்பெஷல் லோகோவை பரிசளித்ததற்கு நன்றி பன்னி பாய். எனது ஸ்டுடியோவில் சிறப்பான இடத்தில் இதை வைத்துள்ளேன். இந்த அருமையான புகைப்படத்தை இன்று எடுத்தற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் கதாநாயகி ராஷ்மிகா, “ஏய்… பெரிய பையன்கள் ஏதோ முத்திரை பதிக்கும் விஷயத்தை உருவாக்குகிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.