புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

தமிழ் சினிமா மட்டும் இந்த ஆண்டில் தடுமாறிக் கொண்டிருக்க, மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களில் குறைந்த பட்சம் ஒரு சில படங்களாவது வசூலை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தெலுங்கில் கடந்த வாரம் வெளியான 'தில்லு ஸ்கொயர்' என்ற படம் 80 கோடி வசூலைக் கடந்துள்ளது.
மாலிக் ராம் இயக்கத்தில், சித்து ஜொன்னலகட்டா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் என்டர்டெயின்மென்ட் ஆக அமைந்துள்ளது. காமெடியும், கிளாமருமாக நகரும் படத்தில் முத்தக் காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
2022ல் வெளிவந்த 'டிஜே தில்லு' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவந்துள்ளது. இரண்டாம் பாகத்தில் இயக்குனரும் வேறு, கதாநாயகியும் வேறு. முதல் பாகம் 30 கோடி வசூலைக் கடந்தது. ஆனால், இரண்டாம் பாகம் 100 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளது.
இப்படத்தின் நாயகன் நடிப்பதோடு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதிலும், படத்தொகுப்பு செய்வதிலும் பணியாற்றியவர். இப்படத்தை ரவி ஆண்டனியுடன் இணைந்து எழுதியுள்ளார். இவர் தமிழில் 2014ல் வெளிவந்த 'வல்லினம்' என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.




