திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
புகழ்பெற்ற அரேபிய கதை 'ஆயிரத்தொரு இரவுகள்'. இதில் இடம் பெற்ற முக்கியமான கதை அலிபாபாவும், அலாவுதீனும். இரண்டுமே தமிழ் சினிமாவில் படமாகி உள்ளது. 1955ம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் தயாரான முதல் கலர் (கேவா) படம் இது.
அலிபாபா கதையில் முதலில் நடித்தது எம்.ஜி.ஆர். தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அலிபாபாவாக முதலில் நடித்தது என்.எஸ்.கிருஷ்ணன். 1941ல் வெளியான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் அலிபாபாவாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன் கதை நாயனாக நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.
அலிபாபா காதலிக்கும் மார்ஜியானாக என்.எஸ்.கிருஷ்ணனின் நிஜ மனைவி டி.ஏ.மதுரம் நடித்தார். அலிபாபாவின் கொடுமைக்கார அண்ணன் காசீமாக கன்னட நடிகர் ஹிரண்யா நடித்தார். கொள்ளைக்கூட்டத் தலைவனாக கே.பி.காமாட்சி நடித்தார். என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்தது.