4 கோடி பார்வைகளை கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல்! | இயக்குனர் பீம்சிங்கின் 100வது பிறந்தநாள்: நடிகர் பிரபு நெகிழ்ச்சி | ஜனவரி மாதத்தில் வா வாத்தியார் படத்தை வெளியிட திட்டம் | 'சித்தார்த் 40' படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பாம்பே ஜெயஸ்ரீ மகன் | வீர தீர சூரன் படத்திலிருந்து வெளிவந்த துஷாரா விஜயன் பர்ஸ்ட் லுக் | பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் |
கே.ஜி.எப் படத்தின் இரண்டு பாகங்களுக்கு பிறகு யஷ் நடிக்கும் 19வது படமாக 'டாக்சிக்' உருவாகி வருகிறது. கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். தற்போது படத்திற்கு முந்தைய தயாரிப்பு பணிகள் தீவிரமாகி உள்ளன. இந்த படத்தில் யஷ்ஷிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தவிர மற்றொரு பாலிவுட் நடிகையான கரீனா கபூரும் நடிக்கிறார். இவர் படத்தில் யஷ்ஷின் அக்கா கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.