நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக இத்தனை கோடியா? |
சிவாஜி நடித்த படங்கள் வெற்றியோ தோல்வியா ஏதாவது ஒரு விதத்தில் அந்த படம் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சென்று விடும். அப்படியான ஒரு படம் தராசு. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த படத்தில் பிரபு முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடித்திருந்தார்.
1984ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ராஜகணபதி என்பவர் இயக்கி இருந்தார். சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், பிரபு ஜோடியாக அம்பிகாவும் நடித்திருந்தார்கள். இவர்கள் தவிர எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.என்.நம்பியார், எஸ்.வி.ராமதாஸ், சி.கே.சரஸ்வதி, ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ்குமார், கல்லாபெட்டி சிங்காரம், வடிவுக்கரசி, அருந்ததி, சில்க் சுமிதா, சிலோன் மனோகர், ஹெரான் ராமசாமி, எம்.ஜி.ஆர்.நடராஜன், ஜோதி சண்முகம், ஜெமினி பாலு, காந்திமதி, சோழராஜன், வான்மதி, நியூடோன் கணேசன், பூரணம் விசுவநாதன், உசிலை மணி நடித்திருந்தனர். சில்க் ஸ்மிதா “நான்தானய்யா சிலுக்கு சிலுக்கு” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். மிகப்பெரிய கமர்ஷியல் பேக்கேஜாக வெளியான இந்த படம் பெரும் தோல்வி அடைந்தது.