பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி | பிளாஷ்பேக் : விஜய் சேதுபதிக்கும் மூத்த வாத்தியார் ராஜேஷ் | பிளாஷ்பேக் : தமிழ் சினிமாவான பிரெஞ்ச் நாடகம் | எந்த சொத்து, எப்போது வாங்கினேன் என்பது தெரியாது : நீதிமன்றத்தில் இளையராஜா வாக்குமூலம் |
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை அடைத்த லைகா நிறுவனம், கடனை திருப்பி செலுத்தும் வகையில் விஷால் நடிக்கும் படத்தின் சம்பளம், அவர் தயாரிக்கும் படத்தின் உரிமைகளை தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால் லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக விஷால் தற்போது நடித்து வரும் 'ரத்னம்' படத்திற்காக விஷாஷக்கு வழங்க வேண்டிய 2 கோடியே 60 லட்சம் சம்பள நிலுவை தொகையை நீதிமன்றத்தில் செலுத்துமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷாலின் மனுவுக்கு பதிலளிக்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
விஷால் நடிக்கும் 'ரத்னம்' படத்தை ஹரி இயக்குகிறார். ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் தயாரிக்கிறது. விஷாலுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகினி, கவுதம் மேனன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்காக விஷாலுக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.