'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா |
கடந்த மாதம் 22ம் தேதி ஆர்ப்பாட்டமே இல்லாமல் வெளியாகி அதிரடியாக வசூலை குவித்த மலையாள படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்த படம் கமல் நடித்த 'குணா' படத்தோடு தொடர்புடைய கதை அமைப்பை கொண்டிந்ததால் தமிழ்நாட்டு மக்களையும் படம் கவர்ந்தது. இதுவரை உள்ள அத்தனை வசூல் ரெக்கார்டுகளையும் தகர்த்து 200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்திய பாக்ஸ் ஆபிசில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 2005ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த படம் வரும் ஏப்ரல் 6ம் தேதி தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஏற்கனவே 'பிரேமலு' மலையாள படமும் தெலுங்கில் டப் ஆகி வசூலை குவித்து வருகிறது. இதற்கு இடையில் நேற்று 'ஆடுஜீவிதம்' படமும் தெலுங்கில் வெளியானது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் மலையாள படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.