ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதத்திற்குள் மொத்த படமும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ரஜினி படத்திற்காக சமூகவலைதளத்தை விட்டு ஒதுங்கியிருந்து அந்த பணிகளில் ஈடுபட்டு இருந்த லோகேஷ் திடீரென, ‛இன்று மாலை 6 மணி!' என ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அதன்படி 6 மணிக்கு ‛தலைவர் 171' பட டைட்டில் வரும் ஏப்ரல் 22ல் வெளியாகும் என குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டார். அதில் கை கடிகாரங்களால் செய்யப்பட்ட கை விலங்கால் ரஜினி கட்டப்பட்டுள்ளார். பின்னணியில் கடிகாரம் தொடர்பான குறியீடுகள் உள்ளன. இதை வைத்து பார்க்கையில் இந்த படத்தின் கதை டைம் டிராவல் பின்னணியில் இருக்கலாம் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். ஜூனில் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.