ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. வரலாற்று பின்னணியில் இந்தப்படம் தயாராகி உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இது சூர்யாவின் 43வது படமாக உருவாக உள்ளது. இதுதவிர வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது.
இந்நிலையில் சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சூர்யா-கார்த்தி சுப்பராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். இவர்கள் இணைந்து படம் பண்ணுவது இதுவே முதல்முறையாகும். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் மரங்கள் பின்னணியில் கார் ஒன்று பற்றி எரிவது போன்று உள்ளது. மேலும் அதன் உடன் Love Laughter War என குறிப்பிட்டுள்ளனர்.