காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அயலான் படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்து 75 கோடி வரை வசூல் செய்தது. அதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். சாய்பல்லவி நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.
இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும், சிவகார்த்திகேயன் படங்களில் இது ஒரு மெகா படமாக இருக்கும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் வட்டாரங்களில் கூறுகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.