23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'பேமிலி ஸ்டார்'. இதில் அவர் ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கி உள்ளார். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிசுந்தர் இசை அமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற 5ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும், அறிமுக விழாவும் ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவும், மிருணாள் தாக்கூரும் அந்த பகுதி மக்களுடன் ஆடி பாடி ஹோலி கொண்டாடினார்கள்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது: வண்ணங்களால் உடை கறைபட்டுவிடும் என்ற பயத்தில், பள்ளிக் காலத்தில் ஹோலி பண்டிகையை தவிர்த்து வந்தேன், ஆனால் தேர்வுக்காலத்தின் போது அனைவரும் கலர் கலராக இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால், இங்கு ஹோலியை உங்களுடன் கொண்டாடுவது தான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கிறது. இப்போது உங்கள் தேர்வுகள் முடிந்துவிட்டதால், ஏப்ரல் 5 ஆம் தேதி எங்களுடன் திரையரங்குகளில் 'பேமிலி ஸ்டார்' படத்தை பார்க்க வாருங்கள். இது நம்மைப் போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் கதை, குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களின் கதை. என்றார்.
நாயகி மிருணாள் தாகூர் கூறுகையில், "நான் வழக்கமாக மும்பையில் ஹோலி கொண்டாடுவேன், ஆனால் இந்த முறை, 'பேமிலி ஸ்டார்' படக்குழுவினருடனும், உங்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பேமிலி ஸ்டார் குழுவின் ஹோலி நல்வாழ்த்துக்களை, உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் 'பேமிலி ஸ்டாரை' பார்த்து ரசியுங்கள்” என்றார்.