ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
'கொலை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம், 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் கதாநாயகி என்றாலும் விஜய்யின் 'கோட்' படக் கதாநாயகி என்றால்தான் மீனாட்சி சவுத்ரி பற்றி ரசிகர்களுக்குத் தெரியும். அப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எவ்வளவு காத்திருக்கிறார்களோ, அதுபோலத்தான் மீனாட்சியும் காத்திருப்பார். அப்படத்திற்குப் பிறகுதான் அவர் இன்னும் பிரபலமாவார்.
தற்போது கிடைத்துள்ள ஓய்வில் மீனாட்சி அவரது குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டில் உள்ள புக்கட் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சில புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். சில அசத்தலான கிளாமர் புகைப்படங்களும் அதில் அடக்கம்.
'கோட்' படத்தின் படப்பிடிப்பு கூட சில வாரங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டில் நடந்தது. ஒரு வேளை அப்படப்பிடிப்பில் அவரும் கலந்து கொண்டு தாய்லாந்து நாட்டு அழகில் மயங்கியிருக்கலாம். கலந்து கொள்ளாமல் இருந்தாலும் படக்குழுவினர் சொன்னதைக் கேட்டு அங்கு சென்றிருக்கலாம்.
மாலத்தீவுக்கு சென்று கொண்டிருந்த நடிகைகள் தற்போது அந்த இடத்தை விட்டு மற்ற நாடுகளுக்கு செல்வதே ஒரு மாற்றம்தான்.