தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 234வது படமாக 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, த்ரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜஸ்வர்யா லஷ்மி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் செர்பியாவில் நடைபெற்றது. தற்காலிகமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கால்ஷீட் பிரச்னையால் ஏற்கனவே இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் வெளியேறினார். அவரைப்போலவே இப்போது ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்னையால் இந்த படத்தை விட்டு தற்போது வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தல் காரணமாக கமல் பிரச்சாரத்திற்கு கிளம்ப உள்ளார். இதனால் இதன் படப்பிடிப்பு தாமதம் ஆகும் என தெரிகிறது. இதனாலயே ஜெயம் ரவி வெளியேறிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், இது குறித்து எந்த வித உறுதியான தகவல் வெளியிடவில்லை.