இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே |

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா. அந்த வகையில் இந்த வருடம் தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் இணைந்து விஷ்வம்பரா என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். வசிஷ்டா என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி இசையமைக்கிறார்.
சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த த்ரிஷா, ஒருநாள் காலைப்பொழுதில் நாயகன் சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் மரகதமணி இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “உண்மையிலேயே ஜாம்பவான்களுடன் ஒரு தெய்வீக காலைப்பொழுது” என்று கூறியுள்ளார்.




