இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை |
இசை அமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு 'இளையராஜா' என்ற பெயரிலேயே தயாராகிறது. இதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய வன்முறை படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம் இந்த படத்தை முதலில் மாரி செல்வராஜ் தான் இயக்க இருந்ததாகவும், ஆனால் இளையராஜா வேண்டாம் என கூறிவிட்டதாகவும் வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும் வெற்றிமாறனும் இயக்குனர் லிஸ்ட்டில் இருந்தாராம். ஆனால் அவரையும் இளையராஜா மறுத்துவிட்டாராம். அதன்பிறகுதான் அருண் மாதேஸ்வரன் இயக்குனராகி இருக்கிறார்.