'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

ரஜினியின் வாழ்க்கை எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் அதிகம் தெரியாத விஷயம், அவரது கிளாஸ்மேட் ஒருவரும் நடிகையாக வலம் வந்தது. சென்னையில் அப்போது பிலிம் சேம்பரில் செயல்பட்ட திரைப்படக் கல்லூரியில் ரஜினி ஆக்டிங் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது அவருடன் படித்தவர் ஹேமா சவுத்ரி. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி டப்பிங் கலைஞரான பிருந்தாவன் சவுத்ரியின் மகள். ரஜினி கன்னடத்தில் இருந்து வந்த மாதிரி இவர் தெலுங்கில் இருந்து நடிப்பு கற்க வந்தவர்.
கே.பாலச்சந்தர் திரைப்பட கல்லூரி விழாவுக்கு சென்ற இடத்தில்தான் ரஜினியை சந்தித்து பின்னாளில் அவரை பெரிய ஸ்டார் ஆக்கினார். அதே கல்லூரியில் கே.பாலச்சந்தர் சந்தித்த இன்னொரு முகம் ஹேமா சவுத்ரி. அவர் ஹேமாவை மறக்காமல் தான் இயக்கிய 'மன்மதலீலை' படத்தில் கமலுக்கு ஜோடியாக ஜெயபிரதா, ஒய்.விஜயா, ஜெயவிஜயா, சுதா ஆகியோரோடு ஹேமாவையும் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆதிராஜ் ஆனந்த மோகன் இயக்கத்தில் வெளிவந்த 'பெல்லி கனி பெல்லி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அங்கு நாயகியாக அறிமுகமானார்.
ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தவர் மார்க்கெட் சரிந்ததும் 1980களிலிருந்து வில்லி கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹேமா தமிழில் குங்குமம் கதை சொல்கிறது, ஸ்டார், நான் அவனில்லை, தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அம்ருதவர்ஷினி, நாயகி முதலிய சின்னத்திரைத் தொடர்களிலும் இவர் நடித்திருக்கிறார். தற்போது பெங்களூருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ரஜினி ஹேமாவுடன் நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நட்பு பாராட்டி வருகிறார். அண்மையில் உடல்நலம் குன்றிய ஹேமாவை ரஜினி பெங்களூருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்து வந்ததாகவும் ஒரு தகவல் உண்டு.




