இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
இயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணியில் வெளியான 'சிங்கம்' படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் இரண்டு பாகங்கள் பெற்ற வரவேற்றை 3வது பாகம் பெறவில்லை. இதனால் அதன் நான்காம் பாக கதை தயாராக இருந்தும் சூர்யா நடிக்காமல் ஒதுங்கினார். ஹரி, சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் சிங்கம் 4 கைவிடப்பட்டது.
இதுகுறித்து ஹரி கூறியிருப்பதாவது: நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றித்தான் கேட்கிறார்கள். சிங்கம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த படம். அதனால் அடுத்த படத்திற்கு அதிக உழைப்பும், யோசிப்பும் வேண்டும். எனக்கும் சூர்யாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அருவா கதை அப்படியே இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் தொடங்கும். சிங்கம் 4 பற்றி காலம்தான் பதில் சொல்லணும். நான் இப்போது ரத்னம் படத்தில் பிசியாக இருக்கிறேன். எனது வழக்கமான பாணியிலான பக்கா ஆக்ஷன் படம் இது. விஷால் இதில் வேற மாதிரி வந்து நிற்பார். என்றார்.