குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'இளையராஜா' படத்தின் பணிகள் தொடங்கி விட்டது. 'கேப்டன் மில்லர்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. காரணம் அவரின் முந்தைய படங்கள். வசந்த் ரவி நடித்த 'ராக்கி', செல்வராகவன் நடித்த 'சாணி காயிதம்', தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படங்கள் வன்முறை நிறைந்ததாக இருந்தது. இப்படியான படங்களை இயக்கியவரால் இளையராஜா வாழ்க்கை கதையை இயக்க முடியுமா என்று கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் படத்தில் தனுஷ் இளையராஜாவாக தோன்றும் ரசிகர்கள் உருவாக்கிய பல புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவற்றில் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சில பாராட்டுகளை அள்ளி வருகிறது. அவற்றில் ஒன்று இளையராஜா இளம் வயதில் இசை அமைக்கும் கருப்பு வெள்ளை படம். மீசை அரும்பாத வயதில் அவர் பெரிய ஜாம்பவான் போன்று கை அசைத்து இசையை ஒருங்கிணைப்பு செய்யும் இந்த படம் புகழ்பெற்றது. அந்த படத்தை போன்றே 90 சதவிகித ஒற்றுமையுடன் வெளியாகி உள்ள தனுஷ் படம் வைரலாக பரவி உள்ளது.