பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
இந்திய இசையுலகம் மட்டுமல்லாது உலகத்தில் உள்ள இசையுலகினரும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஆயிரத்தைத் தாண்டிய படங்கள், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் என இன்றும் ரசிக்கப்படுபவர், கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா.
சினிமாவில் பல்வேறு கலைஞர்களின் பயோபிக், அதாவது வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இன்னும் உருவாக்காமல் இருக்கிறார்கள். இளையராஜாவின் பயோபிக் படம் வருவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அவரது இசையை ரசிக்கும் அனைவருக்குமே விருப்பமான ஒன்றுதான்.
ஆனால், அதையும் தாண்டி இன்றைய சினிமா ரசிகர்கள் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இளையராஜாவின் பயோபிக் படமான 'இளையராஜா' படத்தை இயக்கப் போவது அருண் மாதேஸ்வரன். பொங்கலுக்கு வெளியான 'கேப்டன் மில்லர்' படத்தின் இயக்குனர். இந்தப் படம் மற்றும், இதற்கு முன்பு அவர் இயக்கிய 'சாணி காயிதம், ராக்கி' ஆகிய படங்களை இயக்கியவர்.
அருண் இயக்கிய மூன்று படங்களுமே ரத்தம் தெறிக்கத் தெறிக்க எடுக்கப்பட்ட வன்முறைப் படங்கள். அப்படிப்பட்ட படங்களை இயக்கியவர் இசையால் நம்மை எப்போதும் தாலாட்ட வைக்கும் இளையராஜாவின் பயோபிக்கை எப்படி எடுப்பார் என்ற விமர்சனங்களையும் முன் வைக்கிறார்கள்.
இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ், இளையராஜா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து யாரும் விமர்சிக்கவில்லை. அதே சமயம், அருண் மாதேஸ்வரன் இயக்குவது குறித்துதான் பல்வேறு கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றிற்கெல்லாம் பதிலடி கொடுக்குமளவிற்கு அருண் மாதேஸ்வரன் இந்த 'இளையராஜா' படத்தைக் கொடுக்க வேண்டும்.