இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கின்றார் என அறிவித்தனர்.
இதன் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 2025ம் ஆண்டில் திரைக்கு வருகிறது. இப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர் என கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தனர்.
சமீபகாலமாக இளையராஜா பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது இதன் தொடக்க விழாவை வருகின்ற மார்ச் 20ம் தேதியில் சென்னையில் உள்ள பிரமாண்டமான தனியார் ஹோட்டலில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.