ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

நடிகர் கவின் தற்போது இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்திலும், சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் 'கிஸ்' என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இது அல்லாமல் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வந்தார். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இதன் படப்பிடிப்பு சென்னை, மைசூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. 46 நாட்கள் இதுவரை இதன் படப்பிடிப்பு நடைபெற்றது என்கிறார்கள். மேலும், இதில் கதாநாயகியாக அக்ஷயா நடிக்கின்றார். ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது .




