இந்தவாரம் 10 படங்கள் ரிலீஸ் : தேறியது எத்தனை... | 'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் |
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்து 2017ல் வெளிவந்த படம் 'புரூஸ் லீ'. இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரித்தி கர்பந்தா. அதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக ஹிந்தியில் மட்டுமே நடித்து வருகிறார்.
அவருக்கும் பாலிவுட் நடிகர் புல்கிட் சாம்ராட் என்பவருக்கும் நேற்று குர்கான் நகரில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். தனது சமூக வலைத்தளத்தில் திருமண புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார் கிரித்தி. அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.