குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சமீபகாலமாக ரசிகர்கள் பலர் நடிகர்களிடம் ரொம்பவே உரிமை எடுத்துக் கொள்கின்றனர். அப்படித்தான் சமீபத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, டொவினோ தாமஸ் ஆகியோரிடம் சில மாணவர்கள் நீங்கள் எங்களது பதிவில் கமெண்ட் இட்டால் தான் நாங்கள் தேர்வுக்கு படிக்க துவங்குவோம் எனக் கூற அவர்களும் அதேபோல செய்தார்கள். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் தி பேமிலி மேன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட விஜய் தேவரகொண்டா சரியாக மாலை 5 மணிக்கு டீசர் வெளியாகி விடும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் சொன்ன நேரத்தை விட இரண்டு மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகவே ரசிகர் ஒருவர், “எவ்வளவு நேரமாக காத்துக் கொண்டிருப்பது ? எப்போது தான் டீசரை வெளியிடுவீர்கள் ? என்ன நடக்கிறது இங்கே ?” என்று கோபத்துடன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு ரொம்பவே கூலாக பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, “ஸாரி டியர்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் டீசர் வெளியாகி விடும்.. அதற்கான அப்லோடிங் போய்க் கொண்டிருக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சுவது போன்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் விஜய் தேவரகொண்டா இப்படி நடந்து கொள்வது தனது படத்தின் புரமோசனுக்கும் உதவியாக இருக்கும் என்பதால் தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.