'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம், விஜய் ரசிகர்கள் கோட் படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விஜய் ரசிகர் கோட் படத்தின் சிங்கிள் எப்போது வரும் என அவரிடத்தில் கேட்டபோது, விரைவில் வெளியாகும் என்று ஒரு பதில் கொடுத்திருந்தார். அதையடுத்து இப்போது அதே ரசிகர், மீண்டும் சீக்கிரம் என்று சொன்னீர்கள், ஒரு வாரம் ஆகியும் இன்னும் சிங்கிள் அப்டேட் வரவில்லையே என்று கேட்டதோடு, ஒரு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, சொல்லலாம் என்று தான் நினைத்தேன். இப்போ இதுக்கு மேல எப்படி என்று நீங்களே சொல்லுங்க என்று கூறியதோடு, விஜய்னா ப்ளட்ஸ் என்ற ஹேஸ்டேக்கை பதிவு செய்துள்ளார். இதை அடுத்து விஜய்யின் மற்ற ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடத்தில், தங்கள் சார்பில் மன்னிப்பு கேட்டதோடு, இது போன்ற தரம் கெட்ட நபர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.