படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | மோகன் நடித்துள்ள ஹரா ஜூன் 7ம் தேதி திரைக்கு வருகிறது! | விஜய் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பெயர் அறிவிப்பு! | ஹிட் சீரியலில் முக்கிய நடிகை மாற்றம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதை அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார். “மாஸ்கோ… த கோட்…” என அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ரஷ்யாவில் ஒரு மாத காலத்திற்கு படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார். சென்னை, புதுச்சேரி, ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு இதற்கு முன்பு நடைபெற்றது. ரஷ்ய படப்பிடிப்பிற்குப் பிறகு சில காட்சிகள் சென்னையில் படப்பிடிப்பு நடந்த பின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என்கிறார்கள்.
பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பார்வதி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, வைபவ் என பெரிய நட்சத்திரக் கூட்டம் இப்படத்தில் நடிக்கிறது. விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.