10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தை இயக்கியவர். கடந்த ஞாயிறன்று ஐதராபாத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாக அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
விசாரணைக்கு வருமாறு அவரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக அவரது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அதனால் தலைமறைவு என அவரைப் பற்றி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் மும்பையில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இதனிடையே, தெலங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். வழக்கு விசாரணைக்கு நேரில் வர கிரிஷ் தவிர்ப்பது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




