'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கொடைக்கானலுக்கு ஒரு குழுவாக சுற்றுலா செல்லும் கேரள இளைஞர்களில் ஒருவர் அங்குள்ள குணா குகையில் தவறி விழுந்துவிட அவரை காப்பாற்ற மற்றவர்கள் எடுக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. அது மட்டுமல்ல பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வரும் கினோபிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து போட்டி பிரிவில் கலந்து கொண்டுள்ள ஒரே திரைப்படம் இதுதான். இந்த படம் திரையிட்டு முடித்த பிறகு படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் கண் கலங்கினார்கள் என்றும் அதற்கு பிறகு நடந்த கேள்வி பதில் பகுதியில் படத்தின் மேக்கிங் குறித்தும் அந்த குகை உருவாக்கம் குறித்தும் நிறைய கேள்விகளை கேட்டனர் என்றும் அங்கிருந்தபடியே தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் சிதம்பரம்.