கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரோமியோ'. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் என்றஇசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அடிப்படையில் இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது தயாரிப்பின் மூலம் புதிய இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்.
தற்போது பரத் தனசேகர் ரோமியோ படத்தில் இடம் பெறும் செல்லக்கிளியே... என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளார். பாடலை விஜய் ஆண்டனி, ஹேமந்த் பிரகாஷ், ஜெனிபர் ராஜசேகர் ஆகியோர் எழுதி இருக்கின்றனர். ஆதித்யா பாடி உள்ளார்.
இது குறித்து தனசேகர் கூறியதாவது: இந்தப் படத்திற்காக முதன் முதலாக இசையமைத்த டியூன் இதுதான். மிகவும் அன்புடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். இந்தப் பாடலுக்கு பாடகர் ஆதித்யா ஆர்.கேவின் குரல் உயிர் கொடுத்துள்ளது. இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் லைவாக புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் ஒலிகளை இந்தப் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளோம். இந்த இசை 'செல்லக்கிள்ளி' பாடலுக்கு உயர் தரத்தை கொடுத்துள்ளது. இந்தப் பாடல் எனது இசை வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார்.