அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

மைசூரு பொண்ணு ரோஷினி பிரகாஷ். 'சதாப்தி எக்ஸ்பிரஸ்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு கன்னட படங்களில் நடித்தார். 'ஏமாலி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். 'ஜடா' என்ற படத்தில் 5 வருடங்களுக்கு முன்பு நடித்தார். தற்போது அவர் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
8 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானாலும் ரோஷினி நடித்திருப்பது மொத்தம் 10 படங்கள்தான். 'வணங்கனான்' பாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ரோஷினிக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.
'வணங்கான்' படத்தை' சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
'வணங்கான்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள 'வணங்கான்' படத்தின் டீசரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. டீசர் வெளியான ஒரே நாளிலேயே 4 மில்லியன் ரசிகர்கள் இதைப் பார்த்து ரசித்துள்ளனர். தற்போது 'வணங்கான்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.




