கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் | 'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் |

அஜித்துக்கு 'தீனா', விஜயகாந்த்துக்கு 'ரமணா', சூர்யாவுக்கு 'கஜினி', விஜய்க்கு 'துப்பாக்கி' என தமிழிலும், ஆமீர்கானுக்கு 'கஜினி' என ஹிந்தியிலும் அவர்களுக்கு திருப்புமுனை தந்த படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.
ரஜினிகாந்த் நடிக்க ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'தர்பார்' பட தோல்விக்குப் பின் அவர் இயக்கத்தில் நடிக்க விஜய் கூட தயங்கி கதை பிடிக்கவில்லை என்று சொன்னது சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று. கடந்த நான்கு வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்தார் ஏஆர் முருகதாஸ்.
இடையில் ஒரு அனிமேஷன் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வந்தது. ஆனால், சிவகார்த்திகேயன் நடிக்க ஏஆர் முருகதாஸ் இயக்கப் போகிறார் என கடந்த வருடம் அறிவித்தார்கள். சில மாத தாமதங்களுக்குப் பிறகு நேற்று அப்படத்தின் படப்பிடிப்பு திடீரென ஆரம்பமானது.
நேற்றைய ஆரம்ப நிகழ்வு குறித்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் புகைப்படங்களைப் பகிர்ந்து, “இந்த அற்புதமான திறமை கொண்டவர்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சி. இவர்களுடன் இணைந்து சம்திங் ஸ்பெஷல் உங்களுக்காக வருகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த சிறப்பான பயணம் இன்று ஆரம்பமானது,” என சிவகார்த்திகேயன் அதற்கு மேற்கோள்காட்டி பதிலளித்துள்ளார்.