விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள படம் 'மங்கை'. குபேந்திரன் காமாட்சி இயக்கி உள்ளார் 'கயல்'. ஆனந்தி, துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஆனந்தி பேசியதாவது:
இந்த படம் ஒரு டிராவல் கதை. இதனால் பல ஷெட்யூல்களாக படப்பிடிப்பு நடத்தினால் பல பிரச்னைகள் வரும். படத்தோடு மூட் மாறிவிடும் என்பதால் ஒரே ஷெட்யூலில் முடித்தோம். படத்தின் இயக்குனரிடம் கதை குறித்து தெளிவாக கேட்டேன். அவர் வசனம் முதல்கொண்டு பேசி காட்டி முழு ஸ்கிரிப்டையும் என் கையில் கொடுத்தார். அதன் பிறகுதான் இந்த படத்தை தவற விடக்கூடாது என்று நினைத்தேன்.
ஒரு பெண்ணைப் பற்றிய ஆணின் பார்வை குறித்து பேசும் விதமாகவும், ஒரு பயணத்தில் பெண் சந்திக்கும் நிகழ்வுகளையும் பற்றி சொல்லும் படம். எனது கேரியரில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும். படத்தில் நடித்து முடித்த பிறகு கூட, மங்கை கேரக்டரில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். ஒவ்வொரு நடிகைக்கும் அவர்களது இமேஜை மாற்றக்கூடிய ஒரு சில படங்கள் அமையும். அப்படி எனக்கு அமைந்த படம் இது. நிச்சயம் மங்கை எனது இமேஜை மாற்றும். இந்த படத்தின் இயக்குனர் பெரிய இடத்துக்கு வருவார். அவரின் முதல் படத்தில் நடித்த பெருமை எனக்கு இருக்கும் என்றார்.