'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
நடிகர் விஜய் தான் அரசியலில் நுழைவதாக அறிவித்து தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சி பெயரையும் சமீபத்தில் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு திரை உலகில் இருந்து எதிர்பார்த்த பல நபர்களிடமிருந்து எந்த விதமான வரவேற்பு மற்றும் எதிர்ப்பு ரியாக்சன் என எதுவும் வெளிப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் கூட விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசுவது துவங்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், விஜய் மேடையில் நின்று தனது ஆட்கள் மூலமாக வெறும் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் பத்தாது களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும் என்று சில விமர்சனங்களை முன் வைத்தார்.
அதன்பிறகு பேசிய இயக்குனர் பேரரசு, விஜய்க்கு ஆதரவாக தனது கருத்துக்களை கூறினார். குறிப்பாக ‛‛இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் எப்போதும் விஜய்யின் விசுவாசி தான்'' என பொது மேடையிலேயே ஓப்பனாக பேசினார் பேரரசு.
இத்தனைக்கும் அவர் பா.ஜ., கட்சியில் பொறுப்பில் இருந்தாலும் தன்னை திரையுலகில் ‛திருப்பாச்சி' படம் மூலம் அறிமுகப்படுத்தி மீண்டும் ‛சிவகாசி' என்கிற இன்னொரு பட வாய்ப்பையும் தனக்கு கொடுத்ததற்காக நன்றி உணர்வுடன் தனது விசுவாசத்தை பேரரசு வெளிப்படுத்தியுள்ளார் என்றே தெரிகிறது.