'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு | 'தாய்கிழவி'க்கு முன்னுரிமை ; என் படத்திற்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்: ஆரி புகார் | சங்கீதா பற்றி அவதூறு : விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் | ரஜினி, கமல் படத்தை பிலிம் ரோலில் படமாக்கும் நெல்சன் |

'மதராசப்பட்டினம், 2.0, மிஷன் சாப்டர் 1' படங்களின் கதாநாயகியாக ஆங்கிலேய நடிகை சமீபத்தில் அவரது இரண்டாவது நிச்சயதார்த்தத்தைப் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆங்கிலேயே நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார் எமி. இருவரும் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தங்களது நிச்சயம் பற்றி அறிவித்தார்கள்.
ஜனவரி 31ம் தேதி எமி ஜாக்சன் பிறந்தநாள். அதனால், திருமண நிச்சயம் மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றை தனது மகன் மற்றும் வருங்காலக் கணவர் ஆகியோருடன் கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்டப் புகைப்படங்களைப் பகிர்ந்து 'இது ஒரு எமோஷ்' ஆனது என்று குறிப்பிட்டுள்ளார். 'எமோஷனல்' என்பதை 'எமோஷ்' என்று சுருக்கிச் சொல்வது இன்றைய டிரென்ட்.
சில பல பிரபலங்கள், அவர்களது நண்பர்கள், ரசிகர்கள் எமியின் 'எமோஷ்' கொண்டாட்டடத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.




